
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகி உயிரிழந்தமையை கண்டித்து திருகோணமலையில் உள்ள பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீதிகளில் டயர்களை எறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு பாதுகாப்பு கருதி பொலிசாரினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இறந்த இளைஞனின் உடல் அவரது பெற்றோரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு, இறுதி கிரிகைகள் நாளை திருகோணமலை பொது மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.