
சட்டவிரோதமாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியை குலைப்பதற்கு முயற்சித்தால் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு கலகம் அடக்கும் பொலிஸார் உதவிக்கு அழைக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் எதிராக புதன்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த எதிரணி திட்டமிட்டு வருவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. நாட்டில் அமைதியைக் குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொழும்பில் எதிரணியினரால் நடத்தப்படவிருக்கின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து பொலிஸாருக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் ஐ.எம். கருணாரத்ன, அத்தகைய சட்டவிரோத ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்தப்படுமானால் அவ்வேளையில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியைக் குலைக்க முயற்சித்தால் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்படுவார்கள் என்றும் சொன்னார்.